பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கட்டட அமைப்பியல் படிப்பான, பி.ஆர்க்.,கில் சேர்வதற்கு, தனியாக ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழக உயர் கல்வித்துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே ஆன்லைன் பதிவு, நேற்று துவங்கியது. வரும், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரிகளின் எண்ணிக்கை, கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும், www.tneaonline.org என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.