மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவை செப்.,7ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டிற்கான விருது இன்று (செப்.,3) அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் செப்.,5ல் முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் 10 ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் பழனிசாமி விருது வழங்கவுள்ளார். 

மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர், கலெக்டர் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவையடுத்து மத்திய அரசு ஒரு வாரத்திற்கு துக்கம் அனுசரிக்கிறது. இதனால் செப்.,5க்கு பதில் 7ல் விழா நடத்த அரசு முடிவு செய்துஉள்ளது.