🛡 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் ஓராண்டுப் படிப்பு & பட்டப்படிப்புகளுக்கான (மே2020) இறுதியாண்டுத் தேர்வுகளை இணைய வழியில் செப்.21 முதல் நடத்துகிறது.

🛡 தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தோர் www.audde.in என்ற முகவரியில் Hall ticket, தேர்வு நெறிமுறைகள், தேர்வரின் தொடர்பு எண் & மின்னஞ்சல் அடங்கிய பெயர்ப்பட்டியலைத் தரவிறக்கிக் கொள்ளலாம். இத்தகவல்கள் தேர்வரின் பதிவுசெய்யப்பட்ட செல்லிட பேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன.

🛡 தேர்வு வினாக்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட தேர்வர்களின் தொடர்பு எண் & மின்னஞ்சல் விபரங்கள் பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் உரிய துறை ஒருங்கிணைப்பாளர்களை (Co-ordinator, DDE Wing) அணுகலாம்.

🛡 மாணவர்கள் விடையளிக்க A4 அளவு தாளில் அதிகபட்சமாக 40 பக்கங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

🛡 விடைத்தாளின் முதல் பக்கத்தில், மாணவரின் விவரங்கள் அடங்கிய (பல்கலை. வெளியிட்டுள்ள) Template-ஐ A4 தாளில் நகலெடுத்து இணைத்து நிரப்புதல் வேண்டும்.

🛡 மேலும், விடைத்தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் தங்களுடைய பதிவு எண் மற்றும் பக்க எண்ணை இட வேண்டும். (உம்: 003M20001T0010 - 1) எந்தப் பக்கத்திலும் இதைத்தவிர்த்த பெயர் உள்ளிட்ட வேறு எந்தவித சிறப்புக் குறியீடுகளையும் எழுதக்கூடாது.

🛡 ஓவ்வொரு தேர்வும் முடிந்தவுடன், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து PDF / JPEG கோப்பாக மாற்றி அதற்குப் பதிவு எண், பாடக் குறியீட்டு எண் & பாடப் பெயருடன் கூடிய பெயரினை இட வேண்டும் (உதாரணம்: 003M20001T0012 - 710 Indian Political Thought).

🛡 அதன்பின் இக்கோப்பினை வினாத்தாள் வந்த அதே மின் அஞ்சல் முகவரிக்கு, தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

🛡 மேலும், விடைத்தாள்களை மடிக்காமல் பின் அடித்து, பெரிய உறையில் பாதுகாப்பாக ஒட்டி அவரவர்களுடைய ஒருங்கிணைப்பாளர் பெயரைக் குறிப்பிட்டு தொலைதூரக் கல்வி இயக்கக முகவரிக்கு அன்றே அஞ்சல் / கூரியர் மூலம் கட்டாயம் அனுப்பிவிட வேண்டும்.