தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்து பத்திரிக்கை செய்தி (11.08.2020) இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது 

    அச்செய்திகுறிப்பின் படி  2020-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அனைத்து வகை பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு, 6 ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்புகளில் 17.8.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும் சமூக இடைவெளி பின்பற்றுவது சார்ந்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசின் வழிகாட்டுதல்கள் மாணவர் சேர்க்கையின் போது தவறாது பின்பற்றப்பட வேண்டும். 

    ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளில் (2ம் வகுப்பு -10ம் வகுப்பு) சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17.08.2020 அன்று முதல் நடைபெறும்

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 24.8.2020 திங்கட்கிழமை அன்று முதல் நடைபெறும்.

     பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள் / நோட்டுப் புத்தகங்கள் உரியம் பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும்.

     இலவச கட்டாயக் கல்விச் உரிமைச் சட்டம், 2009-ன்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி./ ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை செய்திட இணை தளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்திட மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்