குளறுபடியான பி.எட்., தேர்வு முடிவுகள்

திருப்புத்தூர்; 2019 பி.எட்., தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் முழுமையாக வெளியிடப்படாததால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் பி.எட்., மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டு, ஜூலை, ஆகஸ்டில் முடிவுகள் வெளியிடப்படும்.2018--19ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை 75 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.தேர்வு முடிவுகள் குளறுபடிகளுடன் வெளியானது. கல்லுாரிகளுக்கு வழக்கமாக அனுப்பப்படும்முடிவுகள்

இதுவரை அனுப்பப்படவில்லை. இணையதளத்தில் தனித்தனியாக மாணவர்கள் முடிவுகளை பார்த்து தெரிந்து கொண்டனர். பலருக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை.குளறுபடிகளுடன் வெளியான முடிவுகளை சில நாட்கள் மட்டுமே இணையதளத்தில் பார்க்க முடிந்தது. அத்துடன் மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை.தேர்வு விடைத்தாள் நகல்கேட்ட விண்ணப்பதாரர்களுக்கும்பதில் இல்லை.

ஓராண்டாகியும் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படவில்லை.பல்கலை.,யில் தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் இல்லை. இந் நிலையில் அடுத்த தேர்விற்கான அறிவிப்பை பல்கலை வெளியிட்டுள்ளது. முதலில் எழுதிய தேர்விற்கு முடிவுகள் தெரியாமலேயே மீண்டும் அடுத்த தேர்விற்கு பணம் கட்ட வேண்டியுள்ளதை நினைத்து மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.