அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் இன்று தொடங்க உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.எனவே மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகம், தனது எல்லைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று முதல் முதுகலை வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.