
திருப்பூர்:'மாணவர்களை அழைத்து வர இயலாதபட்சத்தில் பெற்றோர்களே பள்ளிகளில் அட்மிஷன் போடலாம்; குழந்தைகள் வர வேண்டிய அவசியம் இல்லை' என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, நாளை முதல் (17ம் தேதி) துவங்குகிறது. முதல் கட்டமாக, 1, 6, 9ம் வகுப்பு மற்றும் பள்ளி மாறுதலில் வரும் பிற மாணவர்களுக்கும் (2 முதல் 10ம் வகுப்பு) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 1 மாணவருக்கு, 24ல் துவங்குகிறது. அட்மிஷன் அன்றே பாடபுத்தகம், நோட்டு புத்தகம், சீருடை, மற்றும் இதர கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'திறந்தவெளியில் மாணவர்களை நிற்க வைக்க கூடாது. உரிய முறையில் வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர வைத்து அட்மிஷன் மேற்கொள்ளலாம்.ஒரே நேரத்தில் அதிகபட்சம், 10 மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அமர வைத்து சேர்க்கை நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி, காலை, மாலை இருவேளையும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆசிரியர், பெற்றோர், மாணவர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். ஆசிரியர்கள் கையுறை அணிதல் கட்டாயம். கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் காலை, மதியம் என இரு வேளையாக பிரித்து சேர்க்கையை நடத்தலாம், என வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளன.
0 Comments
Post a Comment