இன்று மாணவர் சேர்க்கை: பெற்றோர் சென்றாலே போதும்

கோவை:அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, இன்று முதல் துவங்குகிறது. அங்கன்வாடிகளில் இருந்து ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்கள் திரட்டி, அக்குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், அருகில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை இறுதி வகுப்புகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை, அரசுப்பள்ளிகளிலே சேர்க்க, ஆவன செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர் மட்டும் வந்து, குழந்தையின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தால் போதுமானது.

பாடப்புத்தகங்கள், நோட்டு, புத்தகப்பை உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை முடிந்ததும் வழங்கப்படும்.பள்ளிக்கு வரும் பெற்றோரை, உரிய சமூக இடைவெளி பின்பற்றி, வகுப்பறையில் அமர வைப்பதோடு, பள்ளி வளாகத்தை கிருமிநாசினி தெளித்து, சுத்தமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.