*_4.0 எனப்படும் 4வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது._*

_இதன்படி,கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது._

*_செப்டம்பர் 30 வரை கல்வி, நிறுவனங்கள் செயல்படாது. பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தடை தொடரும்._*

_செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது._

*_செப்டம்பர் 21 முதல் பொழுதுபோக்கு, திறந்தவெளி திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம்._*

_திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும்._

*_மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது.._*

_உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை_

*_9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம். இவ்வாறு 4வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது._*