கடந்த 2 தினங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டரை லட்சம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பல இடங்களில் உள்ள பள்ளிகளில் நடைப்பெற்றது. அரசு கூறியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி கொண்டு 1ம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரையிலான மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதன்படி அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த 2 தினங்களில் மட்டும் இரண்டரை லட்சம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் ச. கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.