ஜார்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஜகர்நாத் மாதோ, அம்மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். 53 வயதாகும் ஜகர்நாத் மாதோ, கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து ஒரு சிலர் தனது தகுதி குறித்து ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
அதுபோல தொடர் விமர்சனங்கள் தன்னை கல்வி பயில ஊக்கமளித்ததாகவும் கூறுகிறார். அதனால் தற்போது அவர் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளதாகவும், தான் கடினமாக படிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள், எட்டு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வி தகுதியை மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.