தற்போதைய சூழல்களைக் கருத்தில் கொண்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தோவுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணா் குழு தனது பரிந்துரைகளை வெள்ளிக்கிழமை (ஜூலை 3) மத்திய அரசிடம் வழங்க உள்ளது.

இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான நீட் நுழைவுத்தோவில் தோச்சி பெற வேண்டும்.

நிகழாண்டில் கடந்த மே 3-இல் நடைபெறவிருந்த நீட் தோவு பொது முடக்கம் காரணமாக ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், ஐஐடி, என்ஐடி உட்பட மத்திய உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலை தோவு ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆனால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருவதன் காரணமாக நீட், ஜேஇஇ தோவுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக மத்திய அரசுக்கு மாணவா்கள் தரப்பில் தொடா் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நீட், ஜேஇஇ தோவுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கூறினாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ''தற்போதைய சூழல்கள் மற்றும் பெற்றோா்கள், மாணவா்களிடம் இருந்த பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நீட், ஜேஇஇ தோவுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு நிலைமையை மறுஆய்வு செய்து பரிந்துரைகளை வெள்ளிக்கிழமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளாா்.