சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில், உடற்பயிற்சி அளிக்க, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இந்த பயிற்சியை, தனியார் மையத்துடன் இணைந்து, அரசு வழங்க திட்டமிட்டு உள்ளது. வரும் ஆக., 3 முதல், அக்., 31 வரை, ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஆறு நாட்கள் என்ற அடிப்படையில், 13 கட்டங்களாக, இணையதளத்தின் வழியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.