சென்னை : 'பிப்ரவரி மாதம் நடந்த, தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகளை, உடனடியாக வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு தட்டச்சு- கணினி பள்ளிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர் செந்தில் அறிக்கை:தொழில்நுட்ப தேர்வு வாரியம் சார்பில், பிப்ரவரி மாதம், தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு விடைத்தாள், மார்ச் முதல் வாரத்திலேயே, திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. தேர்வு முடிந்து, 150 நாட்கள் கடந்தும், இதுவரை தேர்வு முடிவு, வாரியத்தால் வெளியிடப்படவில்லை.சுருக்கெழுத்து தேர்வு முடிவுகளை, ஏப்ரலில் வெளியிட்டிருந்தால், சுருக்கெழுத்து தேர்வு எழுதி, அரசு வேலைவாய்ப்பை பெறும் முயற்சியில் உள்ள மாணவர்கள், அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராக வசதியாக இருந்திருக்கும்.

எனவே, தேர்வு முடிவுகளை, தொழில்நுட்ப தேர்வு வாரியம், உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.