பள்ளிகள் திறக்கப்படுமா?
தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வும் கடந்த 2 மாதம் முன் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு மூன்றாம் ஆண்டு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுமா?

எண்ணம் எங்களுக்கு இல்லை
தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை. அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதை ஆலோசனை செய்து வருகிறோம்.

சூழ்நிலையை பொறுத்தே
பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.