இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ ஆகிய இரண்டு வாரியங்களை ஒன்றாக இணைத்து, ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வனி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

"அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது அரசின் கொள்கைசார் விவகாரமாகும். இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. தேவைப்பட்டால் மத்திய அரசை நேரடியாக அணுகலாம்" என அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும், இந்தியாவில் மாணவர்கள் ஏற்கனவே கடும் புத்தகச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது மாணவர்களை மேலும் அதிகாரிக்கும் எனக் கூறி மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.