தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ...

சென்னை : ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற விரும்புவோர், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின், கற்பித்தல் திறனை பாராட்டும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும், 11ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை, 115 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.