
புதுச்சேரி; தமிழகத்தின் தொலைக்காட்சி வழியாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பள்ளிக் கல்வித்துறை மவுனம் காத்து வருவதால், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகபள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கல்வி தொலைக்காட்சி, தந்தி, பாலிமர், புதிய தலைமுறை மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன் மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் இருப்பதால், அவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கேள்வி கேட்பது மட்டும் வாரத்துக்கு ஒரு முறை நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை தயாராகி வருகிறது. இந்த திட்டம் இன்று 13ம் தேதி துவங்குகிறது.ஆனால், புதுச்சேரியில் இது குறித்த எந்த அறிவிப்பும் பள்ளிக் கல்வித் துறை செய்யாமல் மவுனம் காத்து வருகிறது. புதுச்சேரி, காரைக்காலில்தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றியே பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.ஆனால் தொலைகாட்சி கல்வி வகுப்புகள் குறித்து அரசின் அறிவிப்பு ஏதும் வெளிவராததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி திறப்பு குறித்து மத்திய அரசு இன்னும் எந்த உத்தரவும் வழங்காததால், பள்ளி திறப்பு மற்றும் பாடங்கள் நடத்துவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு தொலைக்காட்சி வழியாக நடத்தும் பாடங்களை, புதுச்சேரி மாணவர்கள் அதனை பார்க்கலாம் என்றனர்.
0 Comments
Post a Comment