இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய PCR கிட் பயன்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் குறைந்த விலையிலான கிட்டை உருவாக்கும் பணியில் டெல்லி ஐஐடி களம் இறங்கியது. அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.

கொரோசுயர் (Corosure) என்ற பெயரில் PCR கிட்டை தயாரித்துள்ளது. இதற்கு ICMR மற்றும் DCGI அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய மனித வள மந்திரி ரமேஷ் போக்ரியால் இன்று கொரோனா சுயர் கிட்டை அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை 399 ரூபாய் மட்டுமே. ஆய்வக கட்டணத்துடன் 650 ரூபாய் ஆகும. மற்ற கிட்டுகளை விட இதன் விலை மிகமிக குறைவு.