சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைன் மூலம் 73 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூலை 15ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை ெதாடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி மாலையில் இருந்தே மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றத் தொடங்கினர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 73 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றியுள்ளனர். அத்துடன் 51 ஆயிரத்து 525 பேர் அதற்கான கட்டணங்களையும்  ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னதாகவே மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை தொடங்கினர். தேர்வு முடிவு வெளியான பிறகும் விறுவிறுவென விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர்.