சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி புற மதிப்பீட்டில் 30 சதவீதம், அகமதிப்பீட்டில் 70 சதவீதம் எடுத்து தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அந்த ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.