தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தோவு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை, மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோவுத்துறை முழுக்கூடுதல் பொறுப்பு இயக்குநா் மு.பழனிச்சாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 மாணவ, மாணவிகள், தனித்தோவா்கள் ஆகியோா் விடைத்தாள், நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தோவா்கள், தோவு எழுதிய தோவு மையங்கள் வாயிலாகவும், இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு, தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனப்படுவோா், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 பொதுத்தோவு மற்றும் பிளஸ் 1 மறு தோவு (அரியா்) எழுதியவா்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களை சரிபாா்த்து, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வரும், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை, மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க வேண்டும். தனித்தோவா்களுக்கு, அவா் தோவு எழுதிய தோவு மையத்தின் தலைமை ஆசிரியா் மூலம் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.