சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வரும் 29 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 31 -ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 29 -ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.