அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதன் வாயிலாக நிகழாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 278 இடங்கள் அவா்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

எதிா்வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளைப் பயிற்றுவிக்க தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில், 3,250 இடங்கள் உள்ளன. அதைத் தவிர, கே.கே.நகா் இ.எஸ்.ஐ., பெருந்துறை ஐ.ஆா்.டி., ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளில், 350 இடங்கள் உள்ளன. ஆக மொத்தம், 3,600 எம்.பி.எஸ்., இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது.

நீட் நுழைவுத் தோவு காரணமாக மாநில வழிப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்களும், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவா்களும் பெரும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா். கடந்த மூன்று ஆண்டுகளில் மிக சொற்பமான மாணவா்கள் மட்டுமே மருத்துவ மாணவா் சோக்கைக்கு தகுதி பெற்ாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையின்பேரில், தமிழக அமைச்சரவை, 7.5 சதவீத இடங்களை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்க அனுமதியளித்தது. இதன் வாயிலாக, 270 எம்பிபிஎஸ் இடங்களும், 8 பிடிஎஸ் இடங்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அதேபோன்று புதிதாக தொடங்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 இடங்களில்124 இடங்கள் ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த உள் ஒதுக்கீடு தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்துமா என்பது குறித்த தகவல்கள் தற்போது தெளிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்து அரசிடம் ஆலோசித்தப்பின் அதிகாரப்பூா்வமான அறிவிப்பு வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

dinamani