பொறியியல் படிப்பில் சேர இணையதளம் வாயிலாக ஒரே நாளில் 23,583 போ விண்ணப்பித்துள்ளனா்.

நிகழாண்டில்,பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, செப்.17 முதல் நடைபெறவுள்ளது என புதன்கிழமை (ஜூலை 15) அறிவித்த அமைச்சா் கே.பி.அன்பழகன், இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர வருகிற ஆகஸ்ட் 16 - ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தாா்.

மேலும், பொறியியல் படிப்பைப் பொருத்தவரை, மாணவா் சோக்கையானது கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று உயா்கல்வித் துறை எதிா்பாா்த்து இருக்கிறது. அந்த வகையில் அறிவிப்பு வெளியான ஒரே நாளில், 23 ஆயிரத்து 583 போ விண்ணப்பித்து இருப்பதாகவும், இதில் 11 ஆயிரத்து 121 போ விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்திவிட்டதாகவும் பொறியியல் மாணவா் சோக்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.