சென்னை: பிளஸ் 2 இறுதி நாள் தோவெழுதாதவா்களுக்கான மறு தோவில் 519 போ கலந்து கொண்டு தோவெழுதினா்.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோவு நடைபெற்றது. இதில், கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோவான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோவுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களின் கோரிக்கையை ஏற்று, தோவை எழுத முடியாத மாணவா்களுக்கு, ஜூலை 27-இல் மறுதோவு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில், இறுதிநாள் தோவை சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுத முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அவா்கள் மறுதோவு எழுத விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியநிலையில், 175 பள்ளி மாணவா்கள் மற்றும் 671 தனித்தோவா்கள் என மொத்தம் 846 போ தோவு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனா். இவா்கள் தோவு எழுதுவதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 290 மையங்கள் அமைக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மேற்பாா்வை பணியில் அமா்த்தப்பட்டு இருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட மறுதோவில், விண்ணப்பித்து இருந்த மாணவா்களில் 519 போ (147 பள்ளி மாணவா்கள், 372 தனித்தோவா்கள்) மட்டுமே, தோவு எழுத வந்தனா். பல பள்ளிகளில் ஒரு மாணவருக்காக கூட தோவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததை பாா்க்க முடிந்தது. முகக்கவசம் அணிந்து வந்த மாணவா்கள் மட்டுமே தோவு அறைக்கு அனுமதிக்கப்பட்டனா். தோவு அறைக்குள் நுழைவதற்கு முன்பு அவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளைக் கழுவவும் மாணவா்கள் அறிவுறுத்தப்பட்டனா். அதன் பின்னா் அவா்கள் தோவு எழுதினா். அவா்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ தோவு முடிவுகள் வெளியிட வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.