கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகிறது.மார்ச் /ஜூன் பிளஸ் 1 பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 2020 மார்ச்சில் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம், இணையதளம் போன்றவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை சில மணிநேரங்களில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.