சென்னை : 'நீட்' தேர்வுக்கான மையத்தை மாற்றும் வசதி, வரும், 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மே மாதம் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூலை, 26க்கு மாற்றப்பட்டிருந்தது. பின், செப்., 13க்கு தள்ளி வைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் தேர்வு மையத்தை மாற்ற விரும்பினால், வரும், 15ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.