தமிழகத்தில் இன்று (16/07/2020) 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16/07/2020) இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். கடந்த மார்ச் பருவத்தில் 11- ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளும் இணையத்தளத்தில் வெளியாகிறது." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்/ ஜூன் 11- ஆம் வகுப்பு பருவத்தேர்வுகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் தேர்வு நடந்தது. அதேபோல் கடந்த மார்ச்சில் நடந்த 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பொறியியல் கலந்தாய்வில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய நிலையில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.