சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கிய மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வரும் 27-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.