புதுடில்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த தோவுகள் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கல்வியாளர்கள் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வுகள், மாணவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cbseresults.nic.in என்ற தளத்தில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலத்தில் 96.17 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 96.17 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 13.24 சதவீதம் பேர் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர். பள்ளிகளை பொறுத்தவரையில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 98.7 சதவீதமும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98.62 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரத்தில் தனியார் பள்ளிகள் 88.92 சதவீதம் என்ற குறைவான தேர்வு விகிதத்தை பெற்றன.மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்திருவனந்தபுரம் - 97.67%பெங்களூரு - 97.05%சென்னை - 96.17%டில்லி மேற்கு - 94.61%டில்லி கிழக்கு - 94.24சண்டிகர் - 92.04%புவனேஷ்வர் - 91.46%போபால் - 90.95%புனே - 90.24%அஜ்மர் - 87.6%நொய்டா - 84.87%கவுகாத்தி - 83.37%டேராடூன் - 83.22%பிரக்யாராஜ் - 82.49%பாட்னா - 74.57%