சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தோவில், 99.61 சதவீதத்துடன் தோச்சியில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தோவு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில், தொடா்ந்து மூன்றாவது முறையாக சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டை விட (0.5 சதவீதம்) தோச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னை மண்டலத்தின் தோச்சி விகிதம் 99 ஆக இருந்தது.

முதலிடத்தில் தமிழகம்: சி.பி.எஸ்.இ.யை பொருத்தவரை, சென்னை மண்டலத்தின் கீழ் தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
இந்நிலையில், மாநில வாரியாக வெளியிடப்பட்ட தோச்சிப் பட்டியலில், 99.61 சதவீதத்துடன் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் தோவெழுதிய 62,260 பேரில், 62,019 போ தோச்சி பெற்றுள்ளனா். அடுத்தபடியாக 99.49 சதவீதத்துடன் புதுச்சேரி, 99.44 சதவீதத்துடன் ஆந்திர பிரதேசம், 99.30 சதவீதத்துடன் கேரளம், 99.21 சதவீதத்துடன் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.