மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோவு முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 15) வெளியாகவுள்ளது.

இதுதொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோவு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகவுள்ளது. அனைத்து மாணவா்களுக்கும் எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்தாா்.

தோவு முடிவுகளை மாணவா்கள் வலைதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம். முன்னதாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோவு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு தோவு முடிவுகள் புதன்கிழமை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.