புது தில்லி: ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ஐஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

cisce.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதாவது, 09248082883 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மாணவர்கள் தங்கள் 7 இலக்க பதிவெண்ணை அனுப்பினால் அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய 99.33% மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பில் 96.84% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.