சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியானது. ப்ளஸ் 2 தேர்வு எழுத தவறியவர்களுக்காக கடந்த 27ஆம் தேதி மறு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளனர். பிளஸ்2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம்... மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமருவார் - கார்த்தி சிதம்பரம்