ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் பள்ளிக்கல்வி விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும் அறிவுரை வழங்குதல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார கல்வி அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பின்றி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 22.06.2020 பிற்பகல் பார்வையிட பட்டது. வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கோமதி என்பார் தனது சொந்த இருசக்கர வாகனத்தில் 28 மாணவர்களுக்குரிய புத்தகங்களை எடுத்துச் சென்றபோது முதன்மை கல்வி அலுவலரின் நேரடிப்  பார்வைக்கு தெரிய வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 பார்வையில் காணும் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்  கூறிய அறிவுரைகளில் இப்படி வட்டார கல்வி அலுவலர்கள் வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துக் கொண்டு போய் நேரடியாக பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வட்டார கல்வி அலுவலரின் இவ்வகையான செயல்கள் எச்சரிக்க தக்கது என தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து பணியாளர்கள் மூலமாக விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

 மேலும் தொடர்ந்து இது போன்று செயல்பட்டால் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது