தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கும்  தமிழ்நாடு அரசின் உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை வகுப்புகளை நடத்த இருக்கின்றனர்.

வெப்பினார் மூலம் நடைபெறும் இவ்வகுப்புகள் 2020 நவம்பரில் CA  Foundation தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயணளிக்கும் வகையில் திட்டமிட்டு சுமார் மூன்று மாதங்கள் அதாவது ஜூன் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன. திங்கள் முதல் சனிவரை வாரத்தின் ஆறு நாள்கள் காலை 08.00மணியிலிருந்து 11.15 மணி வரையிலும் மாலை 05.00மணியிலிருந்து இரவு 08.15மணி வரையிலும் இவ்வகுப்புகள் நடைபெறும்.

சிஏ பவுண்டேசன் பாடதிட்டத்துக்கு www.icai.org இனையத்தில் பதிவு செய்து, வரும் நவம்பரில் தேர்வு எழுத விரும்புகிற மாணவர்கள் இவ்வகுப்புகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம். 

இந்த வசதியை பெற்று கொள்ள விரும்பும் மாணவர்கள் 

தங்களது பெயர்:
தந்தை பெயர்:
வசிக்கும் ஊர்:
பிறந்த தேதி:
அலைபேசி எண்:
மின்னஞ்சல் முகவரி:

போன்ற விவரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அரசு பள்ளியில் பயின்றதற்கான  சான்றிதழ் (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்வின் ஹால் டிக்கட் (ஸ்கேன் செய்து ) sircclasses@icai.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். 
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் சிஏ பவுண்டேசன் தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 8220522669 / 9176826789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பட்டயக் கணக்காளர் ஆகவேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் கொண்டவர்கள் https://sircoficai.org/aspire என்ற எங்களது இணைய தளத்தினை அணுகி பயன்பெறலாம்.

இந்த முயற்சி மாண்புமிகு திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழக பள்ளி கல்வி துறையின் தொடர் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் இந்த இலவச online Coaching Class  நடத்தப்படுகின்றன.

 மேலும் ICAI யின் தென்மண்டல (SIRC ) அலுவலகமும் தமிழக பள்ளி கல்வித் துறையும் 2018ஆம் ஆண்டில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அரசின் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிஏ பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது   இதன்மூலம் இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பயணடைந்திருக்கிறார்கள்.

அரசு சார்பாக முனைவர் S. கண்ணப்பன் - Director of School Education department அவர்களும்

தென்னிந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பாக கோவையை சேர்ந்த ஆடிட்டர் கு.ஜலபதி (9842896673)
தலைவர் - மாணவர்கள் வழிகாட்டுதல் குழு அவர்களும் ஒருங்கிணைந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்

 சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இந்த நிகழ்நிலை வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.