கோவிட் - 19 தொற்று காரணமாக 10 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வானது மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களினால், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே , தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களை 10ம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத் தேர்வுப் பணிக்கு தேவை ஏற்படும்பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தேர்வுப் பணியில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.