கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உடல் ஊனமுற்றோர் , கற்பிணி பெண்கள் , ஐம்பது வயதிற்கு மேற்பட்ட நபர்கள் , கொரோனா தொற்று உள்ளவர்கள் , கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
20200628132846_wm