சமையலுக்கு மட்டுமல்லாமல் ...

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசாவில் பல் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன

சமையலுக்கு மட்டும் அல்ல. முக பராமரிப்புக்கும் கசகசா பயன்படுகிறது

கசகசாவில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் இப்போது பார்ப்போம்

கசகசா (10 கிராம் அளவு எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து இரவு படுக்கபோகும் முன் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

கசகசா முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவை அனைத்தையும் தலா 100 கிராம் அளவு எடுத்து.

அரைத்துக்கொண்டு, அதில் ஒரு பபூன் பொடியை காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்,

கசகசா முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறைந்து விடும் முகம் அழகு பெறும்,

கசகசா துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் மூட்டுவலி உடனே சரியாகும்.

கசகசா வாழைப்பூ மிளகு, மஞ்சள் இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்த உற்பத்தி அதிகமாகும்.

கசகசா ஜவ்வரிசி, பார்லி இவை மூன்றையும் தவா கிராம் அளவு எடுத்து பச்சரிசியுடன் 100 கிராம் அளவு சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் இடுப்பு வலி சரியாகும்

கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும்.