விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மே, 27 முதல் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும், 203 மையங்களில், இந்த பணி நடக்கிறது. சேலத்தில் ஒரு மையத்தில், ஆசிரியை ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, தகவல் வெளியானது. 

TUUJ


ஆனால், பள்ளி கல்வித்துறை, இதை உறுதி செய்யவில்லை.இந்நிலையில், விடைத்தாள் திருத்த மையங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு, லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், அவர்களையும், மையத்தில் அவருடன் உள்ள மற்றவர்களையும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, விடை திருத்தும் மைய தலைமை அலுவலர்களை, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.


மேலும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களின் முழு விபரங்களை, விடை திருத்த மையங்களில் தயாராக வைத்திருக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.