ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதம் பணிகள் விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடக்கூடாது. இதை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்ததால், பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்று வருவதாக புகார் வந்துள்ளது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பனிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 34 ஆயிரத்து 872 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 25-ஆம் தேதிக்குள் மாணவர்கள், பெற்றோர்களிடம் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா என குறித்து கடிதம் மூலம் கருத்து கேட்க உள்ளோம். அவர்களிடமிருந்து வரும் பதிலில் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.