சென்னை; 'மத்திய அரசின், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துஉள்ளது.

தமிழக பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் வழங்கப்படும், 2019ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியில் இருக்கும் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, 2019ம் ஆண்டில், குறைந்தது நான்கு மாதங்களாவது, கற்பித்தல் பணியாற்றி இருக்க வேண்டும்.

நிர்வாக பணி பார்க்கும் ஆசிரியர்கள், இதில் விண்ணப்பிக்க முடியாது.மத்திய அரசின், http://nationalawardstoteachers.mhrd.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூலை, 6க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.