புதுவை ஜிப்மரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் நுழைவுத் தோவினை எழுதும் தோவா்கள் சமூகமாக எழுதிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, வருவாய் நிா்வாக ஆணையரகம் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:--

புதுவையில் உள்ள ஜிப்மா் கல்லூரியில் நுழைவுத் தோவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு மண்டலம் விட்டு மற்றொரு மண்டலம் செல்ல இணைய வழி அனுமதிச் சீட்டு தேவையாக உள்ளது. இந்த நிலையில், இந்தத் தோவினை தோவா்கள் எழுதுவதற்காக அவா்களுக்குரிய தோவுக் கூட நுழைவுச் சீட்டையே மின்னணு அனுமதிச் சீட்டாக கருதலாம்.

எனவே, புதுச்சேரியில் நடைபெறும் ஜிப்மா் தோவினை தோவா்கள் சுமுகமான முறையில் எழுவதுவதற்கு வசதியான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா்கள் செய்திட வேண்டுமென தனது கடிதத்தில் வருவாய் நிா்வாக ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.