கட்டணம் வசூலிப்பதில் தடுமாறும் தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க முடியாமல், தனியார் பள்ளிகள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட, 12, ஆயிரத்து, 500 தனியார் பள்ளிகள் உள்ளன. பொதுத் தேர்வுகளில், இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில், அதிக எண்ணிக்கையில் சிறப்பிடங்கள் பெற்று, அரசுக்கு பெருமை சேர்க்கின்றனர்.மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு, தனியார் பள்ளிகளின் சேவை மிக முக்கியமானது.

இதற்கு, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கடின உழைப்பும் காரணம்.இப்பள்ளிகளின் வருவாய் என்பது, மாணவர்கள் செலுத்தும் கட்டணம் மட்டுமே. மற்ற படி, அரசு எந்த உதவியும் வழங்குவதில்லை. மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் அரசேநிர்ணயித்துள்ளது.ஊரடங்கால், 'தனியார் பள்ளிகள், கட்டாய கட்டண வசூலில் ஈடுபடக் கூடாது' என்ற கல்வித் துறையின் தெளிவற்ற உத்தரவால், பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க இயலவில்லை.இது குறித்து, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:சம்பளம் வழங்குவது சவால்செந்தில்நாதன், தலைவர், தனியார் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பு: அரசின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. சிறிய மெட்ரிக் பள்ளியில் கூட, 50 முதல், 100 வரை ஆசிரியர், ஊழியர்கள் உள்ளனர். கட்டணம் வசூலிக்காவிட்டால், அவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் சவாலாக மாறும்.அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறோம். எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தவில்லை. முடிந்த வரை செலுத்துங்கள் என்று தான் கேட்கிறோம். மாணவரின் கல்வித் திறனில் கூடுதல் அக்கறை செலுத்த, பல கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம், தனியார் பள்ளிகளுக்கு உண்டு.தற்போது, மாணவர்கள் நலன் கருதி, 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன. வீட்டில் இருந்து, ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதற்கும் சம்பளம் வழங்க வேண்டும். அரசின் இந்த அறிவிப்பால், பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.மாணவர் கற்றல் திறன் பாதிக்கும்கயல்விழி, உறுப்பினர், சி.பி.எஸ்.இ., ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்: பெற்றோர், கட்ட ணம் செலுத்துவதை தடுக்கும் வகையிலான உத்தரவுகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டணம் வசூலிக்காவிட்டால், பள்ளிகளை எவ்வாறு நடத்த முடியும்? ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்கின்றனர். ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள், 'டிவி' மற்றும் அலைபேசியில் பொழுதை கழிக்கின்றனர்.அவர்களுக்கு கற்பித்தலில் தொடர்பை ஏற்படுத்த, ஒரு சில மணி நேர ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் கூட, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட, 'ஆப்லைன்' மூலம் தான், 'வீடியோ' அனுப்பி படிக்க வைக்கிறோம். மாதக்கணக்கில் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, கற்றல் திறனை மறக்காமலும் இருக்க உதவும்.வங்கி கடன்களை எப்படி செலுத்துவது?அருணா, தலைவர், அசோசியேஷன் ஆப் மேனேஜ்மென்ட் பிரைவேட் ஸ்கூல்ஸ்: கட்டணம் வாங்கக் கூடாது; கேட்கக் கூடாது என்றால் பள்ளியை எப்படி நடத்துவது. ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் எவ்வாறு வழங்குவது. பெற்றோர் விருப்பத்தில் தான், ஆன்லைன் வகுப்பு நடக்கிறது.பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிளஸ் 1 சேர்க்கை நடத்தக் கூடாது என்கின்றனர்.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, சில விஷயங்களில் தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.பெரும்பாலான தனியார் பள்ளிகள், வங்கிக் கடன் பெற்று தான் நடக்கிறது. தவணைகளை எவ்வாறு செலுத்துவது. நல்ல கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான், பெற்றோர் இப்பள்ளிகளை நாடி வருகின்றனர்.அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, பள்ளி நிர்வாகத்தின் கடமை அல்லவா. எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

பாதிப்பில் 12 லட்சம் குடும்பங்கள்அசோக் சங்கர், செயலர், சி.பி.எஸ்.இ., ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்: தனியார் பள்ளிகளுக்கு, 70 சதவீத செலவினம் சம்பளம் தான். 12, ஆயிரத்து, 500 தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 12 லட்சம் ஆசிரியர், அலுவலர்கள் குடும்பங்கள், சம்பளத்தை நம்பித்தான் உள்ளன.மாணவர்களின் கட்டணம் இல்லாவிட்டால், இவர்கள் வாழ்வா தாரம் பாதிக்கும். இவர்களுக்கு சம்பளம் இல்லை என்றால், இக்குடும்பங்களுக்கு அரசு தான் நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும்.எந்த பள்ளியும் கட்டாயப்படுத்தி வசூலிக்கவில்லை.

இது போன்ற அரசு அறிவிப்பால், கட்டணம் செலுத்தும் மனநிலையில் உள்ள பெற்றோரும் மாறுகின்றனர்.ஊரடங்கில் மாணவர் உடல் மற்றும் மனரீதியான செயல்பாடு பாதிக்காமல் இருக்க, ஆன்லைன் வகுப்புகள் நடத்த, 'யுனிசெப்' மற்றும் என்.சி.இ.ஆர்.டி., போன்ற அமைப்புகளே பரிந்துரைத்துள்ளன. எனவே, ஆன்லைன் வகுப்பு நடத்தவும் அனுமதிக்க வேண்டும்.சித்தார்த்தா, இணை செயலர், தனியார் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பு: மாநிலத்தில், 80 சதவீதம் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டு கட்டணத்தை, 30 சதவீதம் பெற்றோர் இன்னும் செலுத்தவில்லை; நடப்பு கல்வியாண்டு கட்டணமும் இதில் சேர்ந்துள்ளது.

இது தவிர, ஆர்.டி.இ., சேர்க்கைக்காக, மெட்ரிக் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய முழு தொகையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, 2018ம் ஆண்டில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவை, அரசு குறைத்து அறிவித்ததால், மெட்ரிக் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.'கட்டாயப்படுத்தக் கூடாது' என்பதை, 'பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என நினைத்து, பல பெற்றோர் கட்டணம் செலுத்த மறுக்கின்றனர்.ஆசிரியர், ஊழியர்களுக்கு செய்யும் உதவிகள்காயத்ரி, பெற்றோர், திண்டுக்கல்: ஊரடங்கில், மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் ஆர்வமுடன் நடத்துகின்றன.

வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு உடல், மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதை தவிர்க்க, இப்பள்ளிகள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. பள்ளி என்றால் அங்கு ஆயாக்கள், வாட்ச்மேன்கள் வரை பணியில் இருப்பர்.அவர்களுக்கும் சம்பளம் வழங்க, மாணவர்கள் கல்வி கட்டணம் தான் உதவும். உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்தும் கட்டணம், இது போன்ற ஊழியர்கள் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்.இயக்குனர் எல்.ஆர்., விருப்பம்/டூ ஆல்/எம்.ஆர்.,