மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை கொண்டு வர தமிழக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் தரத்தை கருத்தில் கொண்டு , மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வர இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.