ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடங்கள் குறைக்கப்பட்டதால் புதிய வினாத்தாள் வடிவமைப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான CEG, MIT, ACT கல்லூரிகளுக்கு மட்டும் புதிய வினாத்தாள் வடிவமைப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ளார். வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் இணைப்புக் கல்லூரிகளுக்கும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.