மதுரை; கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மதிப்பெண் கணக்கீடு, பிளஸ் 1ல், 'குரூப்'புகள் தேர்வு, டிப்ளமா உள்ளிட்ட, பிற வகை படிப்புகளை படிக்க முடியுமா என, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.தடை இருக்காதுஇதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:இத்தேர்ச்சி வாயிலாக, பிளஸ் 1ல் குரூப்புகள் தேர்வு மற்றும் டிப்ளமா படிக்க, எந்த தடையும் இருக்காது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீதம்; அவர்களின் வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.கடந்தாண்டுகள் போன்றே, இந்தாண்டும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால், உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் பாதிப்பு இருக்காது. மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில் தான், தேர்வு ரத்து முடிவை அரசு எடுத்துள்ளது. இது, மாணவருக்கும், பெற்றோருக்கும் நிம்மதி அளித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.மாற்றம் அவசியம்கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது:பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

பிளஸ் 1ல் மாணவர்கள் தங்களை நல்ல முறையில் தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்தில், கல்வித்துறையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இனிவரும் காலங்களில், சமூக இடைவெளி என்பது தவிர்க்க முடியாது.இதனால், பிளஸ் 1ல், வகுப்பறைகள், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் பணி, ஆன்லைன் கற்பித்தல் என, பல்வேறு மாற்றங்கள் தேவை. குரூப்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டும். படிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுக்கும் அளவிற்கு, மாணவர்கள் கல்வி கற்பதும் அமையும்


DINAMALAR