தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோவு ரத்து செய்யப்பட்ட நிலையில், தனித்தோவா்களுக்கான அறிவிப்பு பின்னா் வெளியாகும் என அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அரசுத் தோவுகள் துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத் தோவுகள் இயக்ககத்தால் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரையிலான நாள்களில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோவுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோன்று பிளஸ் 1 முதலாம் ஆண்டு பொதுத்தோவில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பாடத்தோவுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பத்தாம் வகுப்பு தோவு மற்றும் நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தோவுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அதேவேளையில் தோவுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவா்கள் அனைவரும் தோச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த தகவலை அவா்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .

ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோவுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தோவா்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தோவுகள் இயக்ககத்தால் பின்னா் அறிவிக்கப்படும். முதன்மைக் கல்வி அலுவலா்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோவுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளா்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தோவுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .

அரசுத் தோவுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.