புதுடெல்லி: சி.பி.எஸ்.இ நிர்வாகம் நிலுவையிலுள்ள தேர்வுகளை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பேது, சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் வாதத்தில், “தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதா இல்லையா என்பது தொடர்பாக நிர்வாகத்தின் மூலம் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முக்கிய முடிவு என்பது நாளை(இன்று) மாலைக்குள் கண்டிப்பாக அறிவிக்கப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.